மனிதர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் நவகிரகங்களின் அடிப்படை குணாதிசயங்கள்!

Malathi Tamilselvan
May 21,2024
';

நவகிரகங்கள்

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் 9 கிரகங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அவற்றின் குணநலன்களை விரிவாக தெரிந்துக் கொள்வோம்

';

சூரியன்

சூரியனை மையமாகக் கொண்டே நவகிரகங்கள் இயங்குகின்றன. ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்கு காரணமாக திகழ்பவர் சூரியன்

';

சந்திரன்

மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படும் சந்திரன்ஒரு நீர்கிரகம். வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப சந்திரன் கொடுக்கும் பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுப பலன் அதிகமாகவும் தேய்பிறையில் சுப பலன் குறைவாகவும் தரும் கிரகம் சந்திரன்

';

செவ்வாய்

போர்குணம் கொண்ட கிரகம். செவ்வாய், உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். சகோதர காரகன் என அழைக்கப்படும் செவ்வாய், ஜாதகத்தில் ஒருவரின் உடன் பிறந்தவர்களின் நிலையைச் சொல்லிவிடும்

';

புதன்

வித்யா காரகன் என்று அழைக்கப்படும் புதன், கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்புகளை நிர்ணயிப்பவர். உறவினர்களிடையே உறவு, கணிதம், அறிவு, கல்வி, கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் அதிபதியாக இருக்கிறார்

';

குரு

புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படும் குருவின் நிலையை வைத்து, ஒருவரின் ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். கிரகங்கள் அனைத்தின்ன் தோஷத்தையும் நீக்ககூடியவர் குரு

';

சுக்கிரன்

களத்திர காரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன், ஒருவரின் ஜாதகத்தில் நல்ல முறையில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அனைத்து கலைகளுக்கும் அதிபதியான சுக்ரன், காதல், சுக போகம் ஆகியவற்றிற்கும் அதிபதி ஆவார்

';

சனி

ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர் தான். நீதிபதியாய் நின்று தண்டனையை கொடுப்பவரும் சனி கிரகமே. நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே. ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனீஸ்வரரே. வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பங்களுக்கும் காரணமாகிறார்

';

ராகு கேது

தனி வீடு இல்லாத நிழல் கிரகங்களான ராகு கேது, சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுபவர்கள். அரசாங்கத்தில் பதவி, புகழ் பெற ராகுவின் அருள் வேண்டும் என்றால், ஞானம், முக்தி பக்தியைப் பெற கேதுவின் அருள் வேண்டும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story