சிறு வயதிலேயே சிகரம் தொட்ட பிரக்ஞானந்தாவை பலரும் பிறவி மேதை என்று சொல்கின்றனர், ஏனென்றால், அவர் 2 வயதில் செஸ் விளையாடத் தொடங்கிவிட்டார்
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய செஸ் வீரர்களில் ஒருவரான பிரக்ஞானந்தாவின் செல்லப் பெயர் பிராக்
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமி தம்பதிகளின் மகன் பிரக்ஞானந்தா.
உலக அளவில் சதுரங்க ஜாம்பவானாக உயர்ந்து நிற்கும் 18 வயது பிரக்ஞானந்தா 2005 ஆகஸ்ட்10ம் தேதி சென்னையில் பிறந்தவர்
பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர். வைசாலியும் செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் ஆவார்
2013ம் ஆண்டில் அவர் சர்வதேச கவனத்தை ஈர்த்தபோது பிரக்ஞானந்தாவின் வயது எட்டு தான்
ஆர் பிரக்ஞானந்தா 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு வயது 10
2022ல், உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் பிரக்ஞானந்தா
இந்திய செஸ் மாஸ்டர், சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை தனது வழிகாட்டியாக நினைக்கிறார் பிரக்ஞானந்தா
தன்னைவிட நான்கு வயது மூத்தவரான அக்காவிடம் இருந்துதான் செஸ் விளையாட்டின் அடிப்படையை கற்றுக்கொண்டார் பிரக்ஞானந்தா
ஆன்லைன் ரேபிட் போட்டியான ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார்
போட்டியில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தாலும், பல சாதனைகளை தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்கும் சதுரங்க ராஜா பிரக்ஞானந்தா