மெட்டபாலிசம் பலவீனமாக இருந்தால், உணவு சரியாக ஜீரணமாகாமல், உடலுக்கு சக்தி கூட கிடைக்காது. மேலும், மெட்டாபாலிஸம் சரியாக இல்லை என்றால் உடல் எடையும் அதிகரிக்கும்.
உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளை பழக்கங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க முக்கியமாக தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். இதனால் உடலில் நச்சுக்களும் வெளியேறும்.
உலர் பழங்கள், வெண்ணைப்பழம் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்கவும்.
முடிந்த அளவு நடப்பது, லிஃப்ட் பயன்படுத்தாமல் படிகளை பயன்படுத்துவது, வீட்டு வேலைகளை செய்வது ஆகியவை மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும்.
7 -8 மணி நேர தூக்கம் நல்ல வளர்சிதை மாற்றத்திற்கு அவசியம்.
கிரீன் டீ, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தும் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
இஞ்சியை தினமும் உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராது, வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. இதி உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், உடல் வலியை நீக்குகிறது.
பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பதால், வளர்சிதை மாற்றம் வலுவடைகிறது. இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் பச்சைக் காய்கறிகளில் காணப்படுகின்றன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.