வங்கி லாக்கர்: புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் தேவைக்கேற்ப லாக்கரின் அளவை வாங்குங்கள். இதன் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம்.
வங்கி லாக்கருக்கு KYC செயல்முறையை முடிப்பது முக்கியம். KYC முடிக்கப்படவில்லை என்றால், நீங்கள் வங்கி லாக்கரைப் பெற முடியாது.
உங்கள் நாமினியை நியமிப்பது முக்கியம். அவர்கள் நீங்கள் இல்லாத சமயத்தில் லாக்கரை அணுக முடியும்.
நீங்கள் வங்கி லாக்கரை வாங்குகிறீர்கள் என்றால், அதில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
வங்கி லாக்கரில் இருக்கும் பொருட்களுக்கு ஏற்ப காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். வங்கியில் அசம்பாவிதம் ஏற்படும்போது இந்த காப்பீடு உங்களுக்கு உதவும்
லாக்கர் நிபந்தனைகளை கவனமாக படித்து அனைத்து விவரங்களறையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
எவ்வளவு நாட்கள் லாக்கர் உபயோக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது உங்களின் கடமை.
லாக்கர் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அடிப்படை விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டால், பொருளுக்கும், பணத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.