ஆதார் கார்டில் இப்படியொரு அம்சம் இருப்பதை நீங்கள் கவனிச்சிருக்கீங்களா?
ஆதார் கார்டில் பல்வேறு வகைகள் இருக்கும் நிலையில், பிவிசி கார்டும் அதில் ஒரு வகை
இந்த பிவிசி கார்டுகளை நீங்கள் வாலட்டுகளில் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லலாம்.
ஆதார் பிவிசி கார்டில் டிஜிட்டல் முறையில் கூடிய அட்டைதாரரின் கையெழுத்து அடங்கிய QR code மற்றும் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
PVC ஆதார் கார்டு பெற UIDAI இணையதளத்திற்கு செல்லலாம் அல்லது mAadhaar ஆப் ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
அதன்பின் virtual id அல்லது ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும். ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். அதை என்டர் செய்து அட்ரஸ் விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். இங்கு நீங்கள் பிவிசி கார்டு பெற ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
நீங்கள் பிவிசி ஆர்டர் ஐ mAadhaar அல்லது UIDAI இணையதளம் வாயிலாக ட்ராக் செய்ய முடியும். அதன்பின் 15 நாட்களுக்குள் உங்கள் PVC கார்டு டெலிவரி செய்யப்படும்.