ஆசிய போட்டி 2023: பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
ஆசிய போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பவுலிங் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 18 ஓவரில் 115 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
அத்துடன் தங்க கோப்பை பெறுவதற்கான இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ள இருக்கிறது.