உங்கள் உடை இழப்பு முயற்சிகளை முறியடித்து, தொப்பை கொழுப்பு குறையாமல் இருக்க காரணமாக உள்ள பழக்கங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
உணவை மென்று மெதுவாக சாப்பிடவில்லை என்றால், வயிறு நிறைந்ததை உணராமல் அதிகமாக சாப்பிடுவீர்கள். ஏனென்றால், உங்கள் வயிறு நிறைந்தது எனற சமிக்ஞையை நரம்புகள் உங்களுக்கு வழங்காது.
வயிறு நிரம்பியுள்ளது என்ற செய்தியை மூளை பெற சுமார் 20 நிமிடங்கள் ஆகும். மிக வேகமாக சாப்பிடும் போது உடலுக்குத் தேவையானதை விட அதிகமாக சாப்பிடுவீர்கள்.
இரவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக வேலை செய்யும். தாமதமாக சாப்பிட்டால் சரியாக ஜீரணமாகாது. இதன் விளைவாக எடை அதிகரிக்கும்
தூக்கமின்மை இருந்தால், உங்கள் மெட்டபாலிஸம் பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மைதா உணவுகள் மற்றும் துரித உணவுகள் நார்ச்சத்து இல்லாதவை. இதனால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.