இந்து மத நம்பிக்கைகளின்படி, பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகின்றனர்
பிரம்மாவின் மனைவி சரஸ்வதி, கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதி ஆவார்
நான்முகன் என்று அழைக்கப்படும் நான்கு தலைகளைக் கொண்ட தெய்வம் பிரம்மா
பிரம்மாவுக்கு 5 தலைகள் இருந்ததாகவும், அவருக்கு ஏற்பட்ட ஆணவத்தை அடக்க சிவபெருமான் ஒரு தலையை கொய்து விட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன
பிரம்மாவின் நான்கு தலைகளும் நான்கு வேதங்களை குறிப்பதாகவும் கூறப்படுகிறது
பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்றாலும், ஒன்றிரண்டு கோயில்கள் பிரம்மாவுக்கு உள்ளன
திருப்பட்டூர் தலத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
யாருடைய தலையெழுத்து மாற வேண்டும் என விதி இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் திருபட்டூர் பிரம்மபுரீஸ்வரரை சந்திக்க முடியும் என்பது ஐதீகம்...