நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதிலும் (FD) ஆபத்து உள்ளது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பிக்ஸட் டெபாஸிட்கள் முழுமையாக பாதுகாப்பானவை என கூற இயலாது.
வங்கிகள் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டாலோ அல்லது செலுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ, டெபாசிட் செய்பவரின் 5 லட்சம் வரையிலான டெபாஸிட் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்.
டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) வங்கி டெபாசிட்டுகளுக்கு ரூ. 5,00,000 வரை மட்டுமே காப்பீட்டு உத்தரவாதத்தை வழங்குகிறது.
பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வருமானம் போதுமானதாக இருக்காது. பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் நிலையில், FD மீதான வட்டி சுமார் 5 சதவீதமாக இருந்தால், உங்கள் வருமானம் கிட்டத்தட்ட பூஜ்யமாக இருக்கும்.
வங்கி FD முதலீட்டில் தேவைப்பட்டால் கணக்கை மூடலாம் என்றாலும், முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க அபராதம் செலுத்தப்பட வேண்டும்.
டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்கள் குறையும் பட்சத்தில், நீங்கள் FD கணக்கை மறு முதலீடு செய்யும் போது, பழைய வட்டி விகிதத்தில் அல்லாமல், குறைவான வட்டி விகிதமே கிடைக்கும்.