தொட்ட காரியம் அனைத்தும் துலங்க, சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது என கணேச புராணம் கூறுகிறது
விநாயகரை முழு முதற்கடவுளாக வணங்கும் இந்து மத சம்பிரதாயத்தில் விநாயகருக்கு சதுர்த்தி நாள் உகந்தது
சந்திரனின் நான்காம் கலை இருக்கும் நாள், மூஷிக வாகனருக்கு உகந்தது
சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல்லால் விநாயகரை அர்ச்சிப்பது விசேஷமானது
கணபதிக்கு பிடித்த லட்டு பிரசாதத்தை இறைவனுக்கு படைத்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்
சங்கடஹர சதுர்த்தியன்று மோதகத்தை கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் முன்வினைகள் அகலும்
விரதம் இருப்பவர்கள், சதுர்த்தி நாளன்று விநாயகருக்கு செய்யும் அபிஷேகத்தை பார்த்தால் புண்ணியம் சேரும்
அபிஷேகம், அலங்காரம் ஆராதனை என சங்கடங்களை தீர்க்கும் விநாயகரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்