ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த முறையும் பட்ஜெட் மீது மக்களுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் உள்ளன. நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக ஆறு முக்கியமான விஷயங்களில் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வருமான வரி செலுத்துவோருக்கு நிதியமைச்சர் வரி சலுகை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை பட்ஜெட்டில் வருமான வரி அடுக்குகளிலும் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது
விவசாயிகளுக்கான சம்பள உத்தரவாதம் குறித்த மிகப்பெரிய நல்ல செய்தியும் எதிர்பார்க்கப்படுகின்றது
சமையல் எரிவாயுவின் மானியமும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது
பெண்களுக்கு தனியாக சுகாதார வசதிகள், நோய் சிகிச்சைகளுக்கான வசதிகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.
கார் கடன்கள் மற்றும் வீட்டு கடன்கள் மலிவாகும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது