பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி மிகவும் விசேசமானது
புரட்டாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது
பித்ரு பக்ஷத்தில் வரும் சதுர்த்திக்கு சங்கஷ்டி சதுர்த்தி என்று பெயர்
சங்கஷ்டி சதுர்த்தியில் விரதம் இருந்தால், துன்பங்கள் கவலைகள் துக்கங்கள் தொலைந்தோடும்
சனீஸ்வரருக்கு உகந்த நாளில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும். சனியின் ஆசியும் கிடைக்கும்
பித்ரு பக்ஷத்தில் வரும் சங்கஷ்டி சதுர்த்தி நாளில் ஹர்சன யோகம் மற்றும் சிவவாஸ் யோகமும் உருவாகிறது. இந்த யோக காலங்களில் விநாயகப் பெருமானை வழிபடுவது, முக்தி கொடுக்கும்
மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் சங்கஷ்டி சதுர்த்தியில் இருக்கும் விரதமானது அனைத்து துன்பங்கள், தொல்லைகள் மற்றும் தடைகளை நீக்கும்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது