கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ஓட்ஸ் மிக பயனுள்ளதாக உள்ளது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவாக இது பார்க்கபப்டுகின்றது.
பிரவுன் ரைஸ், கினோவா, தினை வகைகள் போன்ற முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன.
சியா விதைகள், ஆளி விதைகள் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு எடை இழப்பில் உதவி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன.
பாதாம், அக்ரூட் பருப்பு போன்ற உலர் பழங்களில் நல்ல கொழுப்பு, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் நோயாளிகள் இவற்றை உட்கொள்ளலாம்.
கொய்யாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, நாவல் பழம் ஆகியவற்றில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.
பருப்பு வகைகள், கொண்டைக்கடலை போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.