தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கும் அக்டோபர் மாதம், மனதளவில் புதிய மாறுதல்களைக் கொடுக்கும். உற்சாகம் உருவாகும், பொறுப்புகள் அதிகரிக்கும்
உழைப்பவர்களுக்கும், பிறரை சாராமல் தனித்து நிற்பவர்களுக்கு நல்ல மாதம். அக்டோபரில் கோள்களின் சாரம் ரிஷப ராசியினருக்கு சாதகமாகவே இருக்கிறது
மிதுன ராசியினருக்கு அக்டோபர் மாதம் இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கும். கவனத்துடன் செயல்பட்டால் நஷ்டம் இருக்காது
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்தால், அக்டோபர் மாதம் கடக ராசியினருக்கு நல்லதாக இருக்கும். ஆனால், கோள்கள் உங்களை அப்படி இருக்கவிடாது
உற்சாகமான மாதமாக இருக்கப்போகும் அக்டோபரில் உங்கள் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராத நூதனமான அனுபவத்தைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியுடன் இருக்க அடித்தளம் இடும் மாதம் இது
புரட்டாசியும் ஐப்பசியும் பாதிப்பாதி வரும் அக்டோபர் மாதம், கன்னி ராசியினருக்கு சுமாரானதாக இருக்கும். கவலைகள் இல்லாவிட்டாலும், பெரிய அளவில் மகிழ்ச்சியும் இருக்காது
கடன்சுமையில் இருந்து விடுபடும் நேரம் இது, புதிய தொழில் துவங்குவது உட்பட வாழ்க்கையில் பொருளாதாரம் தொடர்பான வேலைகள் இந்த மாதத்தில் நல்ல பலனைக் கொடுக்கும்
மனதளவில் உத்வேகமும் தைரியமும் அதிகரிக்கும், வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி மாதம் அருமையானதாக இருக்கும்
குடும்ப உறுப்பினர்களால் உதவியால் அலைச்சல்கள் குறையும், மனதில் உற்சாகம் அதிகரிக்கும், சுப செலவு காத்திருக்கிறது
பெரியவர்களின் ஆசியும் அரவணைப்பும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் நல்ல காலம் இது
வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் இது. மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசாமல் இருந்தால் நல்லது
ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகமாகும், குடும்பத்தினரின் மீதான அன்பு அதிகரிக்கும், பொறுப்புகள் கூடும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.