நவகிரகங்களில் குரு மங்களமானவர். தட்சிணாமூர்த்தி என்று பெயர் பெற்ற குரு பகவானுக்கு உரிய நாள் வியாழக்கிழமை
குரு பகவானை வியாழக்கிழமையில் வழிபடுவது சிறப்பு! அதிலும் தட்சிணாமூர்த்தியாய் அருள்புரியும் குருவை வழிபட்டால் என்னசிறப்பு என்பதை தெரிந்துக் கொள்வோம்
தஞ்சை மாவட்டத்தின் நவக்கிரகத் தலங்களில் ஒன்று இரும்பூறை எனப்படும் ஆலங்குடி. இங்கு குரு பகவானை வழிபடுவது சிறப்பு
மயூரநாதர் கோயிலில், குரு பகவான் வழிபட்டு வரம் பெற்ற தலமாகும்
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் சிவன் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்கி வளம் பெறலாம்
காஞ்சிபுரத்துக்கு அருகில் பயம்கோட்டூர் அரம்பேஸ்வரர் திருத்தலத்தில் அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடலாம்
காஞ்சிபுரம் அருகில் உள்ள அகரம் கோவிந்த வாடி திருத்தலத்தில் குருவை வழிபடலாம்
தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டு, நம் தோஷங்கள் நீங்கி, கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது