இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண்
இந்திய அணிக்கு விரைவில் புதிய தலைமை பயிற்சியாளர் நியமிகப்படுகிறார்.
ஏறத்தாழ கவுதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வாய்ப்பு இருக்கிறது.
டபள்யூ பி ராமன், கம்பீர் ஆகியோரை நேர்க்காணல் நடத்திய பிசிசிஐ, கம்பீரை இறுதி செய்திருக்கிறது.
இருப்பினும் அவருக்கு முன்பாக இன்னொருவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல, விவிஎஸ் லக்ஷ்மணன் தான். ஜிம்பாப்வே தொடருக்கு அவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
அந்த தொடருக்குப் பிறகு இந்திய அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கம்பீர் ஏற்க இருக்கிறார்.
அதாவது, இலங்கை சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருப்பார்
இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை.
டி20 உலக கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.