ஜூன் 28ம் நாளான இன்று காலாஷ்டமி அனுசரிக்கப்படுகிறது. கால பைரவரை வணங்கி எம பயம் இல்லாமல் வாழ்வோம்
சிவனின் ரூபங்களில் ஒருவராக கால பைரவர் வணங்கப்படுகிறார்.
சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் கால பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி
ஆடைகள் அணியாத கோலத்தில் 12 கைகள் கொண்டவராகவும், நாகத்தை பூணூலாக தரித்து காணப்படுவார் கால பைரவர்
சந்திரனைத் தலையில் வைத்து, சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகியவற்றை தாங்கிய நிர்வாண ரூபி கால பைரவர்
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என மொத்தம் 8 பைரவர்கள் உண்டு
காலபைரவருக்கு அடிபணிந்தவர்கள் என்பது நம்பிக்கை
சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை நீங்கும்
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது