AIBOC & AIBEA ஆகிய இரு வங்கி சங்கங்களும், வங்கிகள் இணைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளன.
பிராந்திய கிராமப்புற வங்கிகளை (RRB) அந்தந்த ஸ்பான்சர் வங்கிகளுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த வங்கித் துறையும் சிறப்பாகவும் வலுவாகவும் மாற இந்த இணைப்பு அவசியம் என கூறப்படுகிறது
பிராந்திய கிராமப்புற வங்கிகள் அவற்றின் முக்கிய வங்கிகளுடன் (ஸ்பான்சர் வங்கிகள்) இணைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?
பொருளாதாரத்தை வலுப்படுத்த, இரண்டு வகையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது
43 RRB வங்கிகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
கிராமப்புற வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நவீன வங்கி முறைகளை அறிந்து கொள்ள வங்கிகள் இணைப்பு உதவும் என கூறப்படுகிறது
வங்கிகளை இணைத்தால் வங்கிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னையும் தீர்க்கப்படும்