ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு அருமையான, விலை மலிவான ஊட்டச்சத்து பொக்கிஷம் இலந்தைப்பழம்...
ஒரு குறிப்பிட்ட கோவிலில் வணங்கப்படும் மரம், மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு மரம் ஸ்தல விருட்சமாக இருக்கும்.
அந்த வகையில் இலந்தை மரமும், இலந்தைப் பழமும் சிவபொருமானுக்கு பிடித்தவைகள் ஆகும்.
பல சிவன் கோவில்களில் இலந்தை மரம் புனிதமான தல விருட்சமாக இருக்கிறது. அவற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை திருஓமாம்புலியூர், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருக்குரங்கணிமுட்டம் ஆகியவற்றை சொல்லலாம்.
சைவத்தில் மட்டுமல்ல, வைணவத்திலும் இலந்தை மரத்திற்கு முக்கிய இடமுண்டு. ராதை கிருஷ்ணனை திருமணம் செய்துக் கொள்வதற்காக தர்மவஜ் ராஜாவின் மகளாக பிரந்து இலந்தை மரத்தடியில் தவம் இருந்தார் என்றும் ஐதீகம் உண்டு
இலந்தை மரத்தடியில் தான் வேத வியாசர், பதஞ்சலில், பராசரர், வியாக்ரபாதர் என பல ஞானிகளும் தவம் புரிந்துள்ளனர்.
வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ள இலந்தைப்பழம் பல நோய்களுக்கு மருந்தாகிறது.