பலருக்கும் லேப்டாப்பில் சார்ஜ் சீக்கிரம் ட்ரை ஆகும் பிரச்சனை இருக்கிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
லேப்டாப்பில் நாம் செய்யும் சில தவறுகளால் அதன் பேட்டரி விரைவாக மோசமடையத் தொடங்குகிறது.
இதனால் அடிக்கடி லேப்டாப்பை சார்ஜ் போடும் நிலைக்கு தள்ளப்படுவோம். இல்லை என்றால், சார்ஜ் போட்டுக்கொண்டே வேலை செய்ய வேண்டும்.
உங்கள் லேப்டாப்பில் அதிகமாக கேமிங் விளையாடினால் பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால் லேப்டாப் அதிக வெப்பமடைகிறது, மேலும் பேட்டரியில் சேதத்தை ஏற்படுத்துகிறது.
அதிக ஹீட் உள்ள இடத்தில் லேப்டாப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதனால் எளிதில் லேப்டாப் சேதமாகும்.
உங்கள் லேப்டாப்பில் அதிகமாக வீடியோ அல்லது போட்டோ எடிட்டிங் செய்தால் பேட்டரி சீக்கிரம் ட்ரை ஆகி விடும்.
உங்கள் லேப்டாப்பில் அதிகமாக கோப்புகள் இருந்தால் இதன் காரணமாகவும் லேப்டாப் பேட்டரி பிரச்சனை ஆகும்.
உங்கள் லேப்டாப்பிற்கு அதன் ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துவோம். வேறு சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரி வீணாகி விடும்.