பொதுவாக ஒரு உணவு பொருள் காலாவதியானால் அதனை சாப்பிடாமல் தூக்கி வீசுவோம்.
அதுவே ஒரு விஷம் காலாவதியானால் என்ன ஆகும் என்று யோசித்து இருப்போமா?
இந்த கேள்விக்கான விடையை இன்று தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒவ்வொரு விஷமும் வெவ்வேறு இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
எனவே ஒரு விஷம் காலாவதியான பிறகு எப்படி வினைபுரியும் என்பது அந்த குறிப்பிட்ட இரசாயனத்தைப் பொறுத்தது.
சில ரசாயனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதனுடைய வீரியத்தை இழக்கின்றன. இது போன்ற சூழ்நிலையில், விஷம் நச்சுத்தன்மையை இழக்கின்றன.
அதே நேரத்தில் சில இரசாயனங்கள் நாட்கள் ஆக ஆக அதன் வீரியம் அதிகமாகும்.
சில இரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படும் விஷங்கள் காலாவதியான பிறகு இன்னும் ஆபத்தானதாக மாறுகின்றன.
ஒரு விஷம் காலாவதியானால் அதன் தன்மை ஒன்று கூடும் அல்லது குறையும். இது அதன் ரசாயனத்தை பொறுத்தது.