விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
“எல்ஐசி (LIC)” இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
புதுவிதமான காதல் கதையாக இந்த படம் உருவாக உள்ளது.
இப்படத்தின் பூஜையில் விக்னேஷ் சிவன், அனிருத், பிரதீப், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா கலந்துகொண்டனர்.
இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில் கமர்ஷியல் படமாக உருவாகிறது.
நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.
எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.