வட கொரியா நாட்டில் ஜீன்ஸ் அணிய கூடாது. அப்படி அணிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜீன்ஸ் பேண்ட் அல்லது ஷர்ட் அணிந்தால் நீங்கள் அரசாங்கத்தால் கைது செய்யப்படலாம்.
ஜீன்ஸ் அணிவது மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக கருதப்படுவதால் தடை செய்யப்பட்டுள்ளது.
வட கொரியாவில் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
நீங்கள் தவறுதலாக ஜீன்ஸ் அணிந்தால் தொழிலாளர் முகாமுக்கு அனுப்பப்பட்டு, தண்டனையை அனுபவிப்பீர்கள்.
மேலும் அங்கு மேற்கத்திய பாணியில் ஆடை அணிவது, மேக்கப் செய்து கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் முடி வெட்டுவது கூட அரசாங்கம் சொல்லும்படி தான் வெட்ட வேண்டும்.
மேலும் உடலில் எந்த வகையான டாட்டூ போடுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.