யூரிக் அமிலத்தை சட்டென குறைக்கும் சூப்பர் வீட்டு வைத்தியங்கள்: ட்ரை பண்ணி பாருங்க

Sripriya Sambathkumar
Oct 16,2024
';

இஞ்சி நீர்

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. தினமும் இஞ்சி நீர் குடிப்பது யூரிக் அமில அளவை குறைக்கவும் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும்.

';

வாழைப்பழம்

பொடாசியம் அதிகமாக உள்ள வாழைப்பழம் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

';

பால்

குறைந்த கொழுப்புள்ள பால், தயிர் ஆகியவற்றில் இருக்கும் புரதச்சத்து யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும். இவை மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும்.

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் யூரிக் அமில படிகங்களை கரைக்க உதவும். இதை தினமும் காலையில் குடிப்பது உடல் எடையையும் குறைக்கும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

1-2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்து வந்தால், நாளடைவில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம்.

';

செர்ரி

செர்ரி பழங்கள் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

';

தண்ணீர்

யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் யூரிக் அமிலம் எளிதாக சிறுநீர் மூலம் வெளியே வர உதவியாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story