ஏலக்காய் கலந்த பால் குடிப்பதால் செரிமானம் மேம்படும். ஃபைபர் ஊட்டச்சத்து நமது செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏலக்காயை தினசரி உட்கொள்வது இரத்த அழுத்த அளவுகளில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர்புடைய இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம் போக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுத்தலாம். இது மனதில் அமைதியான விளைவைக் கொண்டிருப்பதாகவும், மனநிலையை மேம்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும் உதவும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது.
ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
ஏலக்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராடி வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.