பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
ஆண்கள் பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் சவ்வுகள் வழியாக ரத்தம் பாய தூண்டுகிறது .இதனால் சளி சுரப்பது குறைகிறது. இதன் மூலம் சளி போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு நன்மை அளிக்கிறது.
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.
பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிடுவதால், அல்சர் வராமல் தடுக்கப்படுகிறது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது.