இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளிடையே நல்ல முன்னேற்றத்தையும் தரும்.
இந்த பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.
இந்த பழத்தில் ஒலிகோசாக்கரைடுகள் (கார்போஹைட்ரேட்) நிறைந்துள்ளது, இது ஃப்ளோரா போன்ற நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது, இது சீரான செரிமானத்துக்கு உதவுகிறது.
மன அழுத்தம், மாசுபாடு, மோசமான உணவுப்பழக்கம் போன்ற பிற காரணிகளால் வேகமாக முதுமை ஏற்படலாம். எனவே பளபளப்பான சருமத்துக்கு டிராகன் பழச்சாறு தயாரித்து தினமும் ஒரு முறை குடித்து வரலாம்.
அடர்த்தியான, கருப்பு மற்றும் பளபளப்பான முடி வேண்டுமா? டிராகன் ஃப்ரூட் பவுடரை ஒரு கிளாஸ் பாலுடன் (250 மிலி) தினமும் ஒருமுறை கலந்து சாப்பிடுங்கள், இது உங்களுக்கு நல்லது செய்யும்.
இந்த சூப்பர்ஃப்ரூட்டில் 18% மெக்னீசியம் உள்ளது மற்றும் வலுவான எலும்புகள் மற்றும் நல்ல எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது (பழத்தின் நிறத்தை கொடுக்கும் நிறமி) கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்னைகளைத் தடுக்கிறது.