உடல் எடை அதிகரிப்பு என்பது இந்த காலத்தில் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாகி விட்டது. பல வித முறைகளில் மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இதற்கு பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. உடல் எடையை குறைக்க பலர் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், பல வித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் பருமனை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ள தயிர் (Curd) உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
கிரீன் டீயில் (Green Tea) காஃபின் மற்றும் கேட்டசின்கள் போன்ற ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இந்த இரண்டு சேர்மங்களும் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் இவை எடை குறைக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றன.
கோதுமை, சோளம், பழுப்பு அரிசி, கினோவா போன்ற நார்ச்சத்து நிறைந்த தானியங்கள் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கின்றன, கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.