உலகத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பு என்றால் அது ராஜ நாகங்கள். இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது.

Vidya Gopalakrishnan
Aug 07,2023
';


பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல... என்ற வகையில் ராஜ நாகங்கள் பேரை கேட்டாலே உடம்பெல்லாம் பதரும்

';


ராஜநாகம் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்ற இனத்தை சார்ந்தது. ராஜநாகம் ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும்.

';


பொதுவாக ராஜ நாக பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன என்றாலும் சில 18 அடி நீளம் வளரக் கூடியது.

';


ராஜ நாகத்தின் நுண்ணிய பார்வைத்திறன், 300 அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன் கொண்டது.

';


ராஜ நாகத்தின் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன.

';


ராஜ நாகத்திடம் உள்ள இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிகின்றது.

';


ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உண்ணாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

';


இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

';

VIEW ALL

Read Next Story