நவராத்திரி தினத்தின் துர்க்கையின் 9 வடிவங்கள் வழிபாடு செய்வது போல, ராம நவமிக்கு முன் 9 நாட்கள் வசந்தா நவராத்திரி என கொண்டாடப்படுகிறது.
நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது.
இந்த ஆண்டு ராம நவமி விழா மார்ச் 30ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பூஜை செய்ய உகந்த நேரம் காலை 11:11 முதல் மதியம் 01:40 வரை ஆகும்.
ராமர் படத்திற்கு குங்குமம், சந்தனம் வைத்து துளசி மாலை அணிவிக்க வேண்டும். வெற்றிலை, பழம், பூ ஆகியன படைத்து வழிபட வேண்டும். பானகம், பாயசம், வடை ஆகியன நைவேத்தியமாக படைத்து, ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
ராம நவமி அன்று ராமாயணம், சுந்தரகாண்டம் உள்ளிட்டவைகள் படித்து ராமரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.
பானகம், பாயசம், வடை ஆகியன நைவேத்தியமாக படைத்து, ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
ஸ்ரீ ராம நவமி அன்று தவறாமல் ராமருக்கு பானகமும், நீர்மோரும் படைத்து வழிபட வேண்டும்.