எந்தவொரு செயலிலும் வெற்றி வேண்டுமா? நிரூபணமான சூத்திரம்
உங்களுக்கு எந்தவொரு செயலிலும் வெற்றி வேண்டும் என்றால், இந்த பத்து விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
உங்களின் ஒவ்வொரு அடியும் எப்படி இருக்க வேண்டும், எதைநோக்கி செல்கிறீர்களோ அதற்கு என்ன செய்ய வேண்டும் என தெளிவாக திட்டமிடுங்கள். நிதானமான அதனை செய்யுங்கள்.
உங்களால் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றவைகளை புறந் தள்ளுங்கள். உதாரணமாக, அடுத்தவர்கள் பேசுவதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் சொல்வதை நினைத்து உங்களை நீங்கள் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
கடந்த காலங்களில் உங்களை காயப்படுத்திய விஷயங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அதில் இருந்து இப்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்துங்கள்.
கடந்த காலங்களில் தெரியாமல் செய்த தவறுகளுக்காக, அதனை நினைத்து மீண்டும் மீண்டும் வருத்தப்பட வேண்டாம். உங்களை நீங்களே மன்னித்து, அதில் இருந்து வெளியே வாருங்கள்
உங்களுக்கு என்ன தேவை என முடிவு எடுக்கிறீர்களோ, அதற்கான செயல்பாடுகளை செய்யத் தொடங்குங்கள். இலக்கை நோக்கி தினசரி பயணம் செய்யுங்கள்.
ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அனுமானங்களை எல்லாம் விட்டு, புதிய விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொண்டதை பயன்படுத்துங்கள்.
நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள் மன நிறைவைக் கொடுக்கிறதா?, அதனை பயன்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்றால் நீங்கள் செல்லும் பாதை சரியானது தான். கற்றத்தை பயன்படுத்தாமல் இருப்பது வீண்.
பிறரின் கவலைகளை உங்களுடையதாக நினைத்து நீங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் அனுதாபத்தை தெரிவிக்கலாமே தவிர, மற்றபடி உங்களை காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும். அவர்களுக்கு தேவையான ஆறுதல் விஷயங்களை செய்து கொடுக்கவும்
உங்கள் முயற்சியில் தோல்வி வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். நம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைக்கவும். நிச்சயம் பெரு வெற்றி காத்திருக்கிறது.
ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் உங்கள் முயற்சியை கைவிடகூடாதே தவிர, அதனை செய்து முடிக்க சரியான நேரத்தை தேர்வு செய்யுங்கள். இது உங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும்.