நீரிழிவு நோயாளிகள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்.
மாம்பழம் மிகவும் சுவையான பழமாக கருதப்படுகிறது. ஆனால் அதில் அதிக அளவில் ஃப்ருக்டோஸ் உள்ளது. இதன் கிளைசிமி குறியீடும் மிக அதிகமாக இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
வெள்ளை சர்க்கரையை ஒப்பிடுகையில் தேன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் தேனிலும் ஃப்ருக்டோஸ் மற்றும் குளூகுஸ் உள்ளது. இதன் கிளைசிமிக் குறியீடும் அதிகமாக உள்ளதால் இதை மிகவும் குறைவாகத்தான் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
கரும்பில் சுக்ரோஸ் மிக அதிகமாக இருக்கிறது. இதில் சர்க்கரை அளவு அதிகம். இது மிக வேகமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
மினரல்கள், ஆண்டிஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உள்ள காய்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற ஸ்டார்ச் அதிகமாக உள்ள காய்களை சுகர் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
பல பழங்களில் பொதுவாக பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனினும் சுகர் சிரப்பில் பிராசஸ் செய்யப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டாம். மேலும் பழங்களை அப்படியே சாப்பிடாமல் சாறாக குடிப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க கூடும்.
இவற்றைத் தவிர துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லேட்டுகள் ஆகியவை உடலில் இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.