வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது.
வரி செலுத்துவோர் (Taxpayers) மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வரி செலுத்துவோர் முதலில் தங்களுக்கான சரியான ஐடிஆர் படிவத்தை (ITR Form) தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
இதன் பிறகு, தங்கள் ஐடிஆர் படிவத்தில் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ள தகவல்களை வரி செலுத்துவோர் சரிபார்க்க வேண்டும்.
வரி கணக்கீட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
மாத சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால், Form 16 இன் தரவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மற்ற பிரிவினர் Form 26AS மற்றும் வருடாந்திட அறிக்கையில் TDS போன்றவற்றின் தரவை செக் செய்துகொள்ளலாம்.
கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் ITR விவரங்களை வெரிஃபை செய்ய வேண்டும்.