இருட்டை பார்த்தாலே பயமாக இருக்கிறதா? இதுதான் காரணமா?

S.Karthikeyan
Sep 01,2024
';


இருட்டை பார்த்தாலே உங்களுக்கு பயமாக இருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை இங்கே அறிந்து கொள்ளுங்கள்

';


ஒருவருக்கு இருட்டை பார்த்தாலே பயமாக இருக்கிறது என்றால் அவர்களுக்கு நிக்டோஃபோபியா இருக்கிறது என அர்த்தம்.

';


நிக்டோஃபோபியா என்பது ஒரு வகையான மன நிலை. இந்த நபர் இருட்டில் செல்ல பயப்படுவார்.

';


ஒருவேளை இருட்டில் சென்றால் கூட அவருக்கு பயமாக இருக்கும். அவர்களுக்கு இதயம் வேகமாக துடிக்கும்.

';


இந்த மன நிலை உங்களுக்கும் இருப்பதை நீங்களும் உணர்ந்தால் அது நிக்டோஃபோபியாவின் அறிகுறியாகும்.

';


மார்பு இறுக்கம், சுவாசக் கோளாறுகள், வியர்வை மற்றும் இதயத் துடிப்பு எல்லாம் இருக்கும்.

';


இந்த பயம் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும். தூக்கம் வராது.

';


தனியாக தூங்கும்போது பயமாக இருக்கும். வெளிச்சத்தை கண்டால் மட்டுமே மகிழ்ச்சி இருக்கும்.

';


இவர்களுக்கு உணர்ச்சிகளை கையாளும் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. இருட்டில் செல்வது குறித்து சில பயிற்சிகளை எடுக்க வேண்டும்.

';


கண்களை மூடிக்கொண்டு மனதில் எழும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

';


கூடுதலாக மனநிலை ஆலோசகருடன் உதவியை நாடி அவர்களிடம் பயிற்சியை எடுப்பது சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story