எத்தனை முறை உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிக்கும்?
கர்ப்பம் தரிப்பது என்பது ஒருசிலருக்கு முதல் முயற்சியிலேயே கைகூடி விடும். சிலருக்கு மாதங்கள் ஆகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.
சராசரியாக, தம்பதிகள் முயற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து பாசிடிவ் முடிவைப் பெறும் வரை 78 முறை உடலுறவு கொள்கிறார்கள்.
இந்த 78 முறை என்பது 158 நாட்கள் அல்லது சுமார் 6 மாதங்களுக்கு நீடிக்கிறது. ஒரு ஆய்வு 1,194 பெற்றோர்களை ஆய்வு செய்தது.
பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொள்வதாக பதில் அளித்துள்ளனர்.
பல நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொள்ளக்கூடாது.
பல முறை செக்ஸ் வைத்துக்கொண்டால் கருத்தரித்துவிடலாம் என்பது கற்பனையான நம்பிக்கை என்கின்றனர்.
உண்மை என்னவெனில் அடிக்கடி உடலுறவு கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடும்.
குழந்தை வேண்டும் என முயற்சி செய்யும் தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்வதால் பலன் பெறலாம்.
அப்படி முயற்சித்த தம்பதிகளுக்கும் கருத்தரித்தல் விகிதம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.