உடல் பருமனை குறைக்க புரதம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல குறைந்த கலோரி கொண்ட உணவுகளும் மிகவும் முக்கியம்.
விட்டமின் சி மற்றும் கே உள்ள ப்ரோக்கோலியில் 55 கலோரிகள் மட்டுமே உள்ளன.
ஒரு கப் சமைத்த கீரையில், 4 கிராம் நார்ச்சத்தும், 40 கிராம் கலோரிகளும் இருப்பதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.
பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த கேரட் மிக குறைந்த கலோரி உள்ள நார்ச்சத்து மிக்க உணவு.
ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்று அழைக்கப்படும் முட்டைக்கோஸில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
குறைந்த கலோரி கொண்ட உணவுகளை, டயட்டில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டால், நல்ல பலனை காணலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.