கணையம் உடலின் மிக முக்கிய ஹார்மோனான இன்சுலினை சுரப்பதோடு, உடலின் வளர்ச்சியை மாற்றத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது.
ப்ரோ பயோடிக் உணவான தயிர், கணையத்தில் ஏற்படும் தொற்று பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது
பீட்டா கரோட்டின் நிறைந்த சக்கரை வள்ளி கிழங்கு, கணயத்தை புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்கும்.
இரும்பு சத்து நிறைந்த பசலைக்கீரையில் கணைய ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் பி அதிகம் உள்ளது.
பூண்டில் உள்ள அன்லிசின் என்னும் பயோ ஆக்டிவ் பொருள் கணையத்தில் கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பாலுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், கணைய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
க்கத்தை குறைக்கும் மருத்துவ குணம் கொண்ட காளான்கள், கணையத்தில் வீக்கம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகின்றன.
கணையத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்கும் சக்தி கிரீன் டீயில் உள்ளது. இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
பெர்ரி பழங்களில் உள்ள பிளவனாடுகள், கணைய செல்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கின்றன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.