ஜீரா தண்ணீர் உடல் செரிமானத்திற்கு நல்லது. மேலும் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்கும்.
டீ அல்லது காபிக்கு பதிலாக காலையில் ஜீரா தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
ஜீரா தண்ணீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகப்பரு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
ஜீரா தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான சிறுநீர் அமைப்பை மேம்படுத்த உதவும்.
கிரீன் டீ செரிமானத்தை அதிகப்படுகிறது. ஆனால் ஜீரா தண்ணீரைப் போல நேரடியாக இல்லை.
கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது உதவும்.
கிரீன் டீ உடல் ஆற்றலை அதிகப்படுகிறது. இதன் மூலம் உடனடி சுறுசுறுப்பு கிடைக்கும்.
கிரீன் டீயில் உள்ள பண்புகள் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். மேலும் தோல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவும்.
ஜீரா தண்ணீர் மற்றும் கிரீன் டீ இரண்டுமே ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றை பயன்படுத்தும் முன்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளை கேட்டு கொள்ளுங்கள்.