கடவுளாக அவதரித்த குட்டிக் கண்ணனின் பிறந்த நாள் நாளை என்றால், அவரது அண்ணன் பலராமரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுவது வழக்கம்
கிராமத்தில் நந்தகோபரின் மகனாக வளர்ந்த இரு சகோதரர்களும் ஆவினம் மேய்த்தவர்கள், அதனால் தான் கண்ணனுக்கு கோபாலன் என்ற பெயர் உண்டு
வேளாண் குடும்பத்தில் வளர்ந்த சகோதரர்கள், ஆடு மாடுகளை மேய்த்து வளர்ந்தார்கள். கண்ணனுடன் பசு இருப்பதைப் பார்க்கலாம். அதேபோல, பலராமருடன் எப்போது ஏர் கலப்பை இருப்பதைப் பார்க்கலாம்
கண்ணன் மதியூகி என்றாலும், அண்ணன் சொன்னதை தட்டாத தனயன். அண்ணன் பலராமரோ, மாயக்கண்ணன் என்ன சொன்னாலும், தனக்கு சரி என்பதையே செய்தவர்
விஷ்ணுவுடன் எப்போதும் இருக்கும் சேஷன் தான், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனின் அண்ணனாக பலராம அவதாரம் எடுத்தார் என்பது நம்பிக்கை
கண்ணனை வழிபடுபவர்கள் பலராமரை வழிபடும் நாள் பலராம ஜெயந்தி ஆகும். ஆலயங்களில் விசேஷ பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் உற்சாகத்துடன் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்
ராமாவதாரத்தில் சேஷன் தான், ராமரின் தம்பியாக இலட்சுமணராக அவதரித்தார் என்பது பாரம்பரிய நம்பிக்கை
கண்ணனின் அண்ணனான பலராமர் என்ற முக்கிய ஆளுமையின் பிறந்த நாளை நினைவூட்டும் கொண்டாட்டம்...
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது