புதுசா வாங்குவதை விட செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன் வாங்குவது தான் ஸ்மார்ட்!

Malathi Tamilselvan
Aug 25,2024
';

செகண்ட் ஹேண்ட்

பட்ஜெட் குறைவாக இருந்தால், செகண்ட் ஹேண்ட் போனை வாங்குவது நல்ல தேர்வாக இருக்கும். ஆனால், பழைய போன் வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

';

டிப்ஸ்

செகண்ட் ஹேண்ட் போன் வாங்குவதற்கு சில டிப்ஸ்களை தெரிந்துக் கொள்வது நல்லது, அப்போது தான், ஒரு நல்ல போனை வாங்கலாம் என்பதுடன், வேறுஎந்த மோசடிக்கும் ஆளாகாமல் இருக்க முடியும்

';

மோசடி

பழைய போன் வாங்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாஇட்டால் மோசடிக்கு ஆளாக நேரிடும்

';

IMEI எண்

தொலைபேசி பெட்டியில் எழுதப்பட்ட எண்ணுடன் IMEI எண்ணைப் பொருத்த முயற்சிக்கவும். இது போனின் நம்பகத்தன்மையை காட்டுகிறது. IMEI எண்ணைச் சரிபார்க்க, தொலைபேசியின் டயலரில் இருந்து *#06# ஐ டயல் செய்யவும்.

';

சரிபார்ப்பு

ஸ்மார்ட்போன், ஃபோனின் திரை, கேமரா, பட்டன்கள் போன்றவற்றை நன்கு சரிபார்க்கவும். கீறல்கள், விரிசல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளவும்

';

திரை

போனின் திரையில் டெட் பிக்சல்கள், கோடுகள் போன்றவை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளவும், அத்துடன் வெவ்வேறு கோணங்களில் இருந்து திரையின் தரத்தை சரிபார்க்கவும்.

';

கேமரா

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேமராவில் எடுத்து அதன் தரத்தை சரிபார்க்கவும். ஃபிளாஷ், ஆட்டோ ஃபோகஸ் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்

';

பேட்டரி

சார்ஜிங் எப்படி ஆகிறது என்பதையும் பேட்டரியையும் சரிபார்க்கவும். பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து, அதன் பிறகு எத்தனை மணிநேரம் நீடிக்கும் என்பதைப் பார்க்க அதைப் பயன்படுத்திப் பார்ப்பது நல்லது

';

நெட்வொர்க்

போனில் உள்ள நெட்வொர்க் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதையும் அழைப்பு, செய்தி அனுப்புதல் மற்றும் இணைய இணைப்பின் வேகத்தை சரிபார்க்கவும்.

';

சார்ஜர்

போனின் சார்ஜர் உட்பட பிற பாகங்கள் அனைத்தும் அசலானதா இல்லையா என்பதையும் சரிபார்க்கவும்.

';

VIEW ALL

Read Next Story