உங்கள் பிரட் காய்ந்து போகாமல் இருக்க, நல்ல காற்றோட்டத்துடன் கூடிய பாக்சில் வைக்க வேண்டும்.
இது பிரட் மிகவும் வறண்டு போகாமல் தடுக்கிறது.
பிரிஜ்ட் பிரட்டை விரைவாக பழையதாக மாற்றும். சரியான வெப்பநிலையில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
நல்ல காற்று புகாத கவரில் பிரட்டை சுற்றி வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்
பிரட்டின் மீது சூரிய ஒளிபடாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். சூரிய ஒளி அதன் சுவையை கூட மாற்றும்
கடையில் வாங்கிய பிரட்டை அதன் அசல் பேக்கேஜிங்கில் வைக்கும்போது, இறுக்கமாக கட்டவேண்டும். ஈரப்பதம் மற்றும் சுவையை பராமரிக்க உதவுகிறது.
துண்டுகளாக்கப்பட்ட பிரட் இருந்தால், துண்டுகள் ஒன்றையொன்று தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது ஒவ்வொன்றையும் புதியதாக வைத்திருக்கும்.
முடிந்தவரை பிரட்டை புதிதாக வாங்கி சாப்பிடுங்கள். மிஞ்சி போனால் மட்டும் சேமித்து வையுங்கள்.