கோபம் காயம், விரக்தி அல்லது பயம் போன்ற பிற உணர்ச்சிகளை மறைக்கிறது. உண்மையான காரணத்தை புரிந்து கொள்வது பிரச்சினையை தீர்க்க உதவுகிறது.
கோவப்படுவதற்கு முன் சிந்திக்க சிறிது நேரம் கொடுங்கள். இந்த சிறிய இடைவெளி உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தும்.
கோவப்படுவதற்கு பதில் பேசி பாருங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.
உங்களை எது ட்ரிகர் செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றைத் தவிர்க்கவும் அல்லது மனதளவில் தயாராகவும்.
மற்றவர்கள் சொல்வதைக் கேட்க முயற்சி செய்யுங்கள். இது புரிதலை அதிகரித்து, கோபத்திற்கு வழிவகுக்கும் தவறான தகவல்தொடர்பு வாய்ப்புகளை குறைக்கிறது.
தூக்கமின்மை, அதிக மன அழுத்தம் மற்றும் தவறான உணவு ஆகியவை உங்கள் எரிச்சலை அதிகரிக்கும்.
தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்ற நுட்பங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகின்றன.
அதிக கோவம் வரும் பொழுது அதனை எழுத முயற்சி செய்யுங்கள். இது உங்கள் கோவத்தை கட்டுப்படுத்தும்.