நித்யா மேனன் போல் தோழி கிடைத்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்?
திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷூக்கு தோழியாக நடித்திருப்பார் நித்யா மேனன்
அந்தப் படத்தில் எல்லா சூழ்நிலையிலும் தனுஷூக்கு சப்போர்டாக இருப்பார். பதிலுக்கு அவர் எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே
அந்த நித்யா மேனனைப் போல் உங்களுக்கும் ஒரு தோழி கிடைத்தால் நீங்கள் என்ன ஆவீர்கள் தெரியுமா?
சோகமான, கடக்கவே முடியாத சூழல்களை எதிர்கொள்ளும்போது அந்த தோழியின் தோள்கள் உங்களை ஆசுவாசப்படுத்தும்.
அந்த தோழி நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டுவார். அது நிச்சயம் நல்ல வழியாக இருக்கும்
அன்பை மட்டுமே நம்மிடம் எதிர்பார்ப்பவர்கள் நாம் தோற்றுபோகக்கூடாது என்பதை மட்டுமே விரும்புவார்கள்.
நீங்களே உங்கள் மீது நம்பிக்கை வைக்காதபோது, அந்த நம்பிக்கையை உங்களுக்கு வரவழைப்பார்கள்.
அந்த நம்பிக்கை உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அன்பும் அமைதியும் கிடைக்கும்.
அப்படியொரு தோழி உங்களுக்கும் கிடைப்பார். உண்மையான அன்போடு தேடினால்..!