குளிர்காலம் உங்கள் தலைமுடிக்கு கடுமையானதாக இருக்கலாம்.
குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை, வறட்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கலாம்.
குளிர்காலத்தில் கூட உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும்.
குளிக்கும்போது வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும்.
குளிர்காலத்தில் முடிக்கு ட்ரையர்கள் மற்றும் பிற ஸ்டைலிங் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்.
தலைமுடிக்கு மென்மையான ஷாம்புகளை பயன்படுத்தவும்.
ஆல்கஹால் கலந்த பொருட்களைத் தலை முடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
முடியை அதிகமாக தேய்த்து கழுவினால் இயற்கை எண்ணெய் உங்கள் உச்சந்தலையில் இருந்து வெளியேறும்.
குளிர்காலத்தில் பயன்படுத்தும் தொப்பி மற்றும் குல்லாவை அடிக்கடி கழுவுவது அவசியம்.