யூரிக் அமில அளவு அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமில அளவு அதிகமானால் மூட்டுகளில் கடுமையான வலி (Joint Pain) மற்றும் வீக்கம் இருக்கும்.
மூட்டுகளைத் தொடும்போது வலி உணர்வு இருந்தால் ஜாக்கிரதை, யூரிக் அமில அளவு அதிகரித்திருக்கலாம்.
யூரிக் அமில அளவு அதிகமானால் சிறுநீரகம் தொடர்பான கடுமையான பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் (Kidney Stones) பிரச்சனை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
அடிக்கடி கடுமையான முதுகுவலி வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இது யூரிக் அமில அதிகரிப்பால் இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். யூரில் அமில அளவு அதிகரித்திருக்கலாம்.
யூரிக் அமில அளவு அதிகமானால் எழுந்து உட்காருவதில் சிரமம் ஏற்படும்.
விரல்களின் வீக்கம் இருந்தால் யூரிக் அமில அளவை பரிசோதனை செய்வது நல்லது.