இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கூறுகள் பாகற்காயில் உள்ளன. இது நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது.
சரியான அளவில் உணவு மற்றும் பானங்களில் இலவங்கப்பட்டை கலந்து குடித்தால் சர்கரை அளவை கணிசமாக குறைக்கலாம்.
வெந்தயத்தின் பண்புகள் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. இரவு முழுதும் இதை ஊற வைத்து உட்கொள்வது நன்மை பயக்கும்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கற்றாழை ஜூஸ் குடித்தால் இரத்த சர்கரை அளவை சீராக கட்டுப்படுத்தலாம்.
உணவுக்கு முன் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெல்லிக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
வேம்பில் சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால் இதை மருத்துவர் பரிந்துரையின் பேரில்தான் உட்கொள்ள வேண்டும்.