சம்பாதிக்கும் போதே முதுமைக் காலத்திற்கும் சேர்த்து வைத்தால், ஓய்வு காலத்தில் கஷ்டப்பட வேண்டாம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்காக சேமித்து வை என்பதை உணர்த்தும் பழமொழி.
யாரையும் சார்ந்திருக்காமல், நமது சேமிப்பைக் கொண்டே வாழ்வது சுயமரியாதையை காப்பாற்றும். எனவே, சம்பாதிக்கும் காலத்தில், முதுமை காலத்திற்காக சேமிக்கும் பல திட்டங்களில் சிறந்த 5 திட்டங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்
18 முதல் 70 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த அரசுத்திட்டத்தில் சேமிக்கலாம். ஓய்வூதியம் பெற 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முன் அவசரமாக பணம் தேவைப்பட்டால், வைப்புத்தொகையிலிருந்து 60% தொகையை திரும்பப் பெறலாம். தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்
அரசாங்க உத்திரவாத டெபாசிட் திட்டமான இதில் கூட்டு கணக்கு வசதியும் உண்டு. ஒரு கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது. டெபாசிட் தொகை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். 7.4% வட்டி கிடைக்கும்
பணியாளர் ஓய்வூதியத் திட்டம், தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு சமூகப் பாதுகாப்பு தேவை என்பதற்காக EPFO இந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் EPS க்கு பங்களித்திருந்தால், EPFO இலிருந்து ஓய்வூதியம் பெறலாம்
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் மாத வருமானத்திற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் இதில் பதிவு செய்து, 60 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் சிறு தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம், 60 வயதுக்கு பின், 1000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, மாத ஓய்வூதியம் கிடைக்கும்.
SIP அல்லது வேறு ஏதேனும் திட்டத்தின் மூலம் பெரும் நிதியை டெபாசிட் செய்ய வேண்டும். SWP க்காக உங்கள் ஓய்வூதிய நிதியையும் பயன்படுத்தலாம். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்பதன் மூலம் SWP தொகையைப் பெறுவீர்கள்.
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை