ஆப்பிள் பழங்கள் மீது இருக்கும் ஸ்டிக்கர் குறித்த உண்மை விளக்கம்
ஆப்பிள் பழங்கள் மீது இருக்கும் ஸ்டிக்கர்களில் 4 மற்றும் 5 இலக்க எண்கள் இருக்கும்
இந்த எண்கள் அவை இயற்கையாக அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்
ஒருவேளை, மரபணு மாற்றம் செய்யப்பட்டவையாக இருந்தால் உணவு பொருளின் 4 இலக்க எண்களுக்கு முன்பாக " 8 " என்ற எண் இடம்பெற்று இருக்கும்.
அதே, 4 இலக்க எண்களுக்கு முன்பாக " 9 " என்ற எண் இடம்பெற்று இருந்தால் இயற்கையான உற்பத்தி எனக் குறிப்பிடுகின்றனர்.
PLU குறியீடுகள் ஒவ்வொரு உணவு பொருளுக்கும், அதன் வகையை சார்ந்து பிரித்து வழங்கப்பட்டு உள்ளன.
சூப்பர் மார்க்கெட்களில் சிலவற்றில் மட்டுமே பழங்கள் மீது குறியீடுகளை கொண்ட ஸ்டிக்கர்கள் இடம்பெறுகின்றன. இது அனைத்திற்கும் உதவ வாய்ப்பில்லை.
குறிப்பிட்ட உணவு பொருளானது எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள விருப்பினால்...
..அதில் இடம்பெற்று GMO-FREE, non-GMO அல்லது 100% ஆர்கானிக் என்ற வார்த்தைகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
GMO என்ற வார்த்தைகளை வைத்து மரபணு மாற்றம் குறித்து அறிந்து கொள்ளலாம்.