பொதுவாக, 40 வயதிற்குப் பிறகு, முதுமையின் தாக்கம் காரணமாக, உடல் கொலாஜனை உற்பத்தி செய்வது குறைந்து கொண்டே வருகிறது.
சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, என்றும் இளமையாக இருக்க உதவுகின்றன.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்த மாதுளை, இளமையை காக்கும் சிறந்த பழம்.
தக்காளி கொலாஜனை அதிகரித்து, சேதமடைந்த சருமத்திற்கு உயிர் கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்குகிறது.
வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்த கிவி பழம், சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து காக்கிறது.
முதுமையை அண்டவிடாமல் தடுத்து, இளமையை காக்கும் கொலாஜன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் பெர்ரி பழங்களில் அதிகம் உள்ளது.
அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில், வைட்டமின் ஈ பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருப்பதால், முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.