யூரிக் ஆசிட் பிரச்சனை வந்தால் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது.
தினசரி உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதனை கட்டுக்குள் வைக்க முடியும்.
பச்சை பப்பாளி சாப்பிடுவது யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பச்சை பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இவற்றில் கலோரிகள் குறைந்த அளவே உள்ளதால் யூரிக் அமிலப் பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது.
பச்சை பப்பாளியை காலையில் சாறு போலவும் குடிக்கலாம். அதிக பயன் தரும்.
பச்சை பப்பாளியை வெட்டி, விதைகளை நீக்கி, தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையை குறைக்கலாம்.